கர்நாடகாவில் பட்டாசு விற்பனை, வெடிப்பதற்கு தடை விதிக்க முடிவு- எடியூரப்பா

0 1910
கர்நாடகாவில் பட்டாசு விற்பனை, வெடிப்பதற்கு தடை விதிக்க முடிவு- எடியூரப்பா

ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்குப் பின் பேசிய அவர், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது என்றும் கூறினார்.

பல்வேறு மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுவது தமிழக பட்டாசு உற்பத்தியாளர்களிடையே கலக்கத்தை எற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments