அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொருந்தும்- முதலமைச்சர்

0 2852
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொருந்தும்- முதலமைச்சர்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்ட முதலமைச்சர், தேயிலை உற்பத்தியாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தேயிலை பரிசோதனைக் கூடம் விரைவில் அமைக்கப்படும் என்றார்.

பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments