டிரம்பின் நேரலையை துண்டித்த டிவி சேனல்கள்...பொய்களை வரிசையாக அடுக்கியதாக கூறி அதிரடி

0 4943
டிரம்பின் நேரலையை துண்டித்த டிவி சேனல்கள்...பொய்களை வரிசையாக அடுக்கியதாக கூறி அதிரடி

வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், அதிபர் டிரம்ப் பொய்களை அடுக்கியதாக கூறி பல டிவி சேனல்கள் நேரடி ஒளிபரப்பை நிறுத்தி எதிர்ப்பை காட்டின.

அதிபர் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக நேற்றிரவு டிரம்ப் டிவி நேரலையில் தோன்றினார். 17 நிமிட பேச்சில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய அவர், ஜனநாயக கட்சியினர், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கள்ளவாக்குகளை போட்டுள்ளதாக கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பல சேனல்கள் நேரலை ஒளிபரப்பை துண்டித்தன. அதிபரின் பேச்சில் தடங்கல் ஏற்படுத்தும் நிலையை அவரே உருவாக்கி விட்டதாக கூறிய MSNBC  சேனல், அவரை திருத்தும் நோக்கில் ஒளிபரப்பை நிறுத்துவதாக அதிரடியாக அறிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments