சென்னை : நிதி நிறுவன மேலாளரை கடத்திய போலீஸ்காரர்! - பின்னணியில் ஆழமான காதல் விவகாரம்

0 4818

சென்னையில் நிதி நிறுவன உதவி மேலாளரரை, கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் போலீஸ்காரர் ஒருவர் கடத்திச் சென்று துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை  அண்ணா சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரிபவர் ராஜேஷ். இவர், முகுலிவாக்கத்தில் தன் மனைவி கிரேசியுடன் வசித்து வருகிறார். நேற்று அலுவலகத்தில் இருந்த ராஜேஷை, போலீஸ்காரர் ஒருவர் , கடத்தி சென்றுவிட்டதாக அவரரின் மனைவி கிரேசி அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில்  புகார் அளித்தார். ஆனால், சிறிது நேரத்தில் ராஜேஷ் வீடு திரும்பினார். 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது, '' ராஜேஷ் 2 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பெற்றோர்களுக்கு தெரியாமல் மமனைவியுடன் சென்னையில் வசித்து வந்த ராஜேஷ் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார். அப்போது, போலீஸ்காரரும் அவரின் நண்பருமான இளையராஜா,  தன் பெயரில் ரூ. 5 லட்சம் வங்கி கடன் பெற்று தந்துள்ளார். சில மாதங்கள் மட்டுமே கடன் தவணையை செலுத்தி வந்த ராஜேஷ் கடன் தொகையை செலுத்ததால் இளையராஜாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து பலமுறை ராஜேஷிடம் கேட்டும் வங்கி கடனை அவர் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து இளையராஜா ராமநாதபுரத்தில் உள்ள ராஜேஷின் தந்தையிடம் முறையிட்டுள்ளார். தன் மகன் ராஜேஷை அழைத்து வந்து தன்னிடம்  ஒப்படைத்தால், வங்கி கடனை தான் செலுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார். இதையடுத்து, அலுவலகத்தில் இருந்த ராஜேஷை கடன் தொடர்பாக பேச வேண்டும் என்று கூறிய அழைத்து சென்ற  இளையராஜா, வேளச்சேரியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

பிறகு, ராஜேஷின் தந்தைக்கு தகவல் அளித்து அங்கு வரவழைத்துள்ளார். காதல் மனைவியை கை விட்டு தன்னுடன் வந்தால், வங்கி கடனை அடைப்பதாக தந்தை மகனிடத்தில்  கூறியுள்ளார். ஆனால், ராஜேஷ் அதற்கு ஓப்புக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்தை  மீண்டும் ராமநாதபுரம் சென்று விட்டார். தொடர்ந்து, ராஜேஷை விடுவித்ததால், அவர் வீடு திருட்பியுள்ளார்.'' என்றனர். 

எனினும், தன் கணவரை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து தாக்கியுள்ளதாக காவலர் இளையராஜா உள்ளிட்டோர் மீது ராஜேஷின் மனைவி புகார் அளித்துள்ளதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments