அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி யாருக்கு ? நீதிமன்றத்தில் வழக்கு

ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இறுதி முடிவை உச்சநீதிமன்றம்தான் எடுக்கும் என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் பெரும்பான்மையை அடைய ஜோ பைடன் தரப்பு நெருங்கிவிட்ட நிலையில் அந்த வெற்றியை டிரம்ப் தரப்பு ஏற்க மறுத்துள்ளது.
இறுதி முடிவுகளுக்காக இருதரப்பினரும் காத்திருக்கும் நிலையில் ஜோபைடன் வெற்றி பெற்ற இடங்களையெல்லாம் சட்ட ரீதியான சவாலுக்கு உட்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து நேற்று டிரcம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளில் பைடன் வென்ற அனைத்து இடங்களிலும் அவர் வெற்றிக்கு எதிராக மோசடி வழக்குத் தொடரப்படும் என்று அறிவித்துள்ளார்.
நிறைய ஆதாரங்கள் தமது கைவசம் இருப்பதாக கூறும் டிரம்ப் விரைவில் தாம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆனால் இறுதி முடிவுகள் வரும் வரை அமைதி காக்க வேண்டும் என்று ஜோ பைடன் தமது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்து விட்டது என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி தாமும் கமலா ஹாரிசும் வெற்றி பெற்று விட்டதாகவும் கூறிய ஜோ பைடன் அமைதி காக்கும்படி தமது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டார்.
Comments