நெல்லை திசையன்விளை வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் பிரச்னை...இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நெல்லை திசையன்விளை வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் பிரச்னை...இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நெல்லை திசையன்விளை வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வியம்மன் கோயிலின் நகைகள், சிலைகள் குறித்து கூட கவனிக்க இயலாதவர்கள் ஏன் பொறுப்பிலிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கை வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் கோவில் சிலைகள் காணாமல் போனது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Comments