கர்நாடக மக்கள் தொகையில் 16 சதவிகிதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருக்கிறது-கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்

0 738
கர்நாடக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேரின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.

கர்நாடக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேரின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 

மொத்தம் 16,624 பேருக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், கர்நாடக மக்கள் தொகையில் 100-ல் 16.4 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.கர்நாடகத்தில் அடுத்ததாக கொரோனா பரவும் வேகம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments