பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்-ஜோ பைடன் உறுதி

0 1002
இன்னும் 77 நாட்களில் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று ஜோ பைடன் உறுதி அளித்தார்.

இன்னும் 77 நாட்களில் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று ஜோ பைடன் உறுதி அளித்தார்.

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஐநா சபையின் முயற்சியால் பாரிஸ் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் கையெழுத்திட்ட அமெரிக்கா பின்னர் விலகியது.

இந்நிலையில், ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில், டிரம்ப் நிர்வாகம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது என்றும், சரியாக 77 நாட்களில், பைடன் நிர்வாகம் மீண்டும் அதில் சேரும்’என்றும் கூறி உள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து ஒரு நாடு விலக வேண்டும் என்றால் அதற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை. ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை டிரம்ப் 2017ம் ஆண்டு வெளியிட்டிருந்தார். அமெரிக்காவின் காத்திருப்பு காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments