என்ன சிம்ரன் இதெல்லாம்..? புஷ்பாவே புருசனான கதை..!

0 56185

கல்லூரிப்படிப்பை பாதியில் கைவிட்ட 21 வயது இளம்பெண்ணும், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த 20 வயது மாணவியும், வீட்டில் இருந்து மாயமான நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் தகவல் அனுப்பி பெற்றோரை கலங்கவைத்த சம்பவம் கர்னூலில் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த காத்தூன் என்பவரின் மகளான 20 வயது சிம்ரனும், பார்வதி அம்மா என்பவரின் மகளான 21 வயது புஷ்பலதாவும் உயிர் தோழிகள் என்று கூறப்படுகின்றது.

புஷ்பலதா படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில் சிம்ரன் கல்லூரியில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். சிறுவயது முதலே தோழிகள் இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றிவந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமாயினர், அவர்களை காணாமல் தவித்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் புஷ்பா, மாணவி சிம்ரனின் தாய் கத்தூனின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோழிகளாக இருந்த தங்கள் நட்பு, காதலாக மாறியதாகவும் திருமணமானால் ஒருவரையொருவர் பிரிந்து கணவன் வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்ற கலக்கத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அழகிய பெண்ணாக இருந்த புஷ்பா தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தை ஆண்களை போல மாற்றிக் கொண்டதோடு, தனது கல்லூரி காதலி சிம்ரனை திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை தேட வேண்டாம், நிம்மதியாக வாழ விடுமாறும் கூறியிருந்தார்.

சிம்ரனுக்கு கணவனாக மாறியுள்ள புஷ்பா, தங்கள் புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக வீட்டில் இருந்து செல்லும் போதே 50 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்து கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளின் இந்த விபரீத காதல் திருமணம் குறித்து அறிந்ததும் கலங்கிப்போன அவர்கள் இருவரையும் மீட்டுத்தரும்ப்படி கர்னூல் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

ஏற்கனவே இங்கே திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் 90 கிட்ஸ்களில் சிலர் கலக்கத்தில் இருக்கும் நிலையில் பெண்களை பெண்களே திருமணம் செய்து கொண்டால் நிலமை இன்னும் விபரீதமாகிவிடும் என்று ஆதங்கம் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் காலமெல்லாம் காத்திருக்கும் காளையர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments