குடிபோதையில் தகராறு செய்து வந்த மகனுக்கு கத்திக்குத்து..கொலையை மறைக்க முயன்ற தந்தை..! காட்டிக்கொடுத்த சிசிடிவி

0 746

சேலத்தில் குடிபோதையில் வேலைக்கு செல்லாமல் தகராறு செய்து வந்த மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை, சிசிடிவி காட்சியால் கைது செய்யப்பட்டார்.

நாழிக்கல்பட்டியை சேர்ந்த சேகரின் மகன் ஜெகன், வீட்டில் பெயிண்ட் அடிக்கும் போது தவறி கீழே விழுந்த போது கத்தி குத்தி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால், பிரேத பரிசோதனையில் ஜெகன் கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது.

பிறகு நடைபெற்ற விசாரணையில், கடந்த ஒன்றாம் தேதி தந்தை, மகனுக்கும் தகராறு நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஜெகனை தந்தை சேகர் கத்தியால் குத்திய காட்சி இருந்தது. அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மகனை கத்தியால் குத்தியதாக சேகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments