அரசு அனுமதி வழங்கினாலும் திரையரங்குகளை திறப்பதில் சிக்கல்

0 2431
அரசு அனுமதி வழங்கினாலும் திரையரங்குகளை திறப்பதில் சிக்கல்

அரசு அனுமதி வழங்கினாலும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பட தயாரிப்பாளர்கள் இடையே நடக்கும் பேச்சில் இழுபறி நீடிப்பதால் திரையரங்குகளை திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

வி.பி.எஃப் கட்டணத்தை யார் செலுத்துவது என்பது தொடர்பாக, சி-பார்ம் வைத்துக்கொண்டு திரையரங்கு நடத்தும் உரிமையாளர்களிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என தயாரிப்பாளர்கள் தரப்பு கூறுவதாக சொல்லப்படுகிறது.

டிக்கெட் விற்பனை தொகையை சரி சமமாக பிரித்துக்கொள்ள ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்தைக்கு வருவோம்  என திரையரங்கு உரிமையாளர்கள் கூறுவதாக தகவல் வெளியானது.

இதனால் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments