அமெரிக்க தேர்தல் முடிவை பற்றி 2 வாரங்களுக்கு முன்பே சரியாக கணித்த பெர்னி சான்டர்ஸ் - வைரல் வீடியோ

0 3394
அமெரிக்க தேர்தல் முடிவை பற்றி 2 வாரங்களுக்கு முன்பே சரியாக கணித்த பெர்னி சான்டர்ஸ் - வைரல் வீடியோ

அமெரிக்க அதிபர் தேர்தலில் என்னவெல்லாம் நடக்கும், டிரம்ப் எப்படியெல்லாம் பேசுவார் என கணித்து முக்கிய செனட்டர் பெர்னி சான்டர்ஸ் 2 வாரங்களுக்கு முன்னர் பேசியது அதே போல பலித்து அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

செனட்டரான சான்டர்ஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிற்க விரும்பி அதன் பின்னர் அதில் இருந்து விலகியவர் ஆவார்.

கடந்த மாதம் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் தேர்தல் இரவு அன்று டிரம்ப் டிவியில் தோன்றி, மிச்சிகன், பென்சில்வேனியா,விஸ்கோன்சினில் வெற்றி பெற்றதாக கூறுவார், தம்மை மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி, எல்லாம் முடிந்து விட்டது, குட்நைட் என கூறிவிட்டு சென்று விடுவார் என கிண்டலடித்தார்.  

பெர்னி சான்டர்ஸ். நேற்று அமெரிக்காவில் அது தான் நடந்தது என்பதால், பெர்னி சான்டர்சின் வீடியோவை 24 மணி நேரத்தில் 2.7 கோடி முறை பார்த்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments