கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்

0 6279

கோவை மருதமலையில் கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வாழைப்பழத்தில் விஷத்தை வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிவமுருகன் என்பவர் அப்பகுதியில்சீட்டு நிறுவனம் நடத்தி நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிகம் கடன் பெற்றுள்ளார். ஆனாலும் நஷ்டத்தில் இருந்து மீள முடியாத நிலையில், அவர் வீடுவீடாகப் பால் பாக்கெட் போடும் வேலை உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வீடு தேடிச் சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த சிவமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் தென்னையில் கூன்வண்டுகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை வாழைப்பழத்தில் வைத்துத் சாப்பிட்டுள்ளனர். இதனால் மகள் ஹேமலதா தவிர சிவமுருகன், மனைவி மற்றும் இன்னொரு மகள் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments