திண்டுக்கல் : நெருங்கும் தீபாவளி... ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு ஆட்டு கிடாக்கள் விற்பனை

0 9336

தீபாவளிபண்டிகையை முன்னிட்டு வேடசந்தூர் அருகேயுள்ள ஆட்டுச்சந்தையில் ரூ1.5 கோடிக்கு ஆட்டுக்கிடாக்கள், கோழிகள் விற்பனையாகின.

திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சந்தையாக அய்யலூர்ஆட்டுச் சந்தை உள்ளது. இந்த சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடக்கும். அய்யலூர் மட்டுமல்லாமல், அதைச்சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு,காணப்பாடிஉள்ளிட்டகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனை செய்ய இந்த சந்தைக்குக் கொண்டு வருவார்கள்.

திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்துஆடுகளை வாங்கி சென்றனர். காலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிவரையில் இந்த சந்தை நடைபெறும். பண்டிகைக்காலங்களில்இரவு 7 மணிவரைகூட சந்தை தீவிரமாக இயங்கும். குறைந்தபட்சம் ரூ 60 லட்சம் அதிகபட்சம் 1 கோடிரூபாய் வரையில் விற்பனைநடக்கும் .வரும் நவம்பர் 14- ஆம் தேதி தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்பட விருப்பதால், இன்று ஆடு , கோழிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. ஆடு,கோழிகளை வாங்கிச் செல்ல இன்று சந்தையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதன் காரணமாக, இன்று ஒரேநாளில் மட்டும் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனையானது.

தீபாவளி சமயத்தில் இறைச்சிக்கான தேவை அதிகமாக இருக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாக்கள் விற்பனையானது. ஆட்டுக்கிடாக்கள் ரூ.5000 முதல் 20,000 வரை விற்பனையாகின. நாட்டுக்கோழிகள் கிலோவுக்கு ரூ.450 முதல் விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments