அதிபர் டிரம்ப்பின் இனவெறி கொள்கையே அவரின் வளர்ச்சி, வீழ்ச்சிக்கு காரணம்- ஜனநாயகக் கட்சியினர்

0 2017
அதிபர் டிரம்ப்பின் இனவெறி கொள்கையே அவரின் வளர்ச்சி, வீழ்ச்சிக்கு காரணம்- ஜனநாயகக் கட்சியினர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் இனவெறி கொள்கையே அவரின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்ததாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிபர் டிரம்ப் சர்ச்சைக் கருத்துக்களின் நாயகனாக இருந்துள்ளார். தான் சார்ந்திருந்த சமயத்தை உயர்த்திப் பிடித்த டிரம்ப், 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்தார். இது அவரின் இஸ்லாமிய வெறுப்பை அப்பட்டமாகக் காட்டியது.

இதேபோல் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாயிட்டின் மரணம் தொடர்பாக நாடே கொந்தளிப்புடன் இருந்த போது, டிரம்ப் எதிர்மறை கருத்துக்களை கூறி அதிர வைத்தார். எரிக் காட்னர் என்ற கருப்பின இளைஞரைச் சுட்டுக் கொன்ற வெள்ளை அதிகாரி விரைவில் விடுவிக்கப்பட்டார்.

பர்கூஸன் என்ற சிறிய நகரத்தில் 12 வயது கருப்பினச் சிறுவனை வெள்ளையின காவல் அதிகாரி 12 முறை சுட்டுக் கொன்றார். ஆனால் இதுபோன்ற விஷயங்களில் டிரம்ப் மவுனம் காத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் டிரம்புக்கு கருப்பின மக்கள் மீதான வெறுப்பைக் காட்டுவதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருந்த போது, உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு உதவி கோரி, புலம்பெயர்ந்தோர் அலைந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தார் என்ற குற்றச்சாட்டு டிரம்ப் மீது வைக்கப்பட்டுள்ளது. மேலும் மெக்ஸிகோ உள்பட மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதைத் தடுக்க எல்லைப் பகுதியில் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பில் சுவரை எழுப்பினார்.

இந்த விவகாரம் அவர் குடியேறிகள் மீதான வெறுப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதுபோன்ற வலதுசாரிக் கொள்கைளும், வெள்ளையினத்தை உயர்த்திப் பிடித்ததும் அவரின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவியதோ, அந்த அளவிற்கு வீழ்ச்சிக்கும் காரணமாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments