ஐபிஎல்: முதல் பிளேஆப் போட்டியில் மும்பை-டெல்லி மோதல்

ஐபிஎல்: முதல் பிளேஆப் போட்டியில் மும்பை-டெல்லி மோதல்
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் பிளேஆப் போட்டியில், மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
துபாயில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள மும்பை அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து தரப்பிலும் வலுவாக உள்ளது.
முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ள டெல்லி அணி, இன்றைய போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேற தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக இரு அணிகளும் மோதிய 2 லீக் போட்டிகளிலும், மும்பை வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் தோற்கும் அணிக்கு, மற்றொரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments