குஜராத்தில் ஜவுளிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

0 836
குஜராத்தில் ஜவுளி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் ஜவுளி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ரசாயன நிறுவனம் ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், அருகில் இருந்த ஜவுளி கிடங்கு கட்டிடம் தீப்பிடித்து இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் 12 வாகனங்களில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியான நிலையில், படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தனர். விபத்தில் பலியானர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments