இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்-மு.க. ஸ்டாலின்

0 1290
இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஆன் - லைன் சூதாட்டத்தை தமிழக அரசு, உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு, உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், ஆன்- லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு  உத்தரவிட்டு 3 மாதம் ஆகியும் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.

சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிடவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திடவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆன்- லைன் சூதாட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments