குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தீ விபத்தில் கட்டிடம் இடிந்து 9 பேர் உயிரிழப்பு

0 1286
குஜராத்தில் ஜவுளி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தில் ஜவுளி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

அகமதாபாத்தில் உள்ள ரசாயன நிறுவனம் ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அதன் அருகில் இருந்த ஜவுளி கிடங்கு கட்டிடம் தீப்பிடித்து இடிந்து விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் 12 வாகனங்களில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியானார்கள்.

3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் பலியானர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments