தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் 20சதவீத இட ஒதுக்கீட்டு சலுகை , தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது : மதுரை கிளை

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகை, தமிழ்நாட்டில் தவறாக பயன் படுத்தப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் வழியில் தொலை தூர கல்வி மூலம் பட்டம் வாங்கியவர்களுக்கு TNPSC தேர்வுகளில் இட ஒதுக்கீடு சலுகை வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் படிப்ப வர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறைப் படுத்தும் வரை குரூப் -1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
Comments