தமிழ்நாட்டில் இன்று 2487 பேருக்கு கொரோனா உறுதி..30 பேர் பலி..!

0 3839
தமிழ்நாட்டில் இன்று 2487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக சரிந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 487  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 2 ஆயிரத்து 504 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

மேலும் 30 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 657 பேருக்கும், கோவையில் 220 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட மொத்தம் 19 ஆயிரத்து 154 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments