தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 9 ஆம் தேதி பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம்

0 3630
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம், வரும் 9 ஆம் தேதி, கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம், வரும் 9 ஆம் தேதி, கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் துவங்கும்.

கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க மாணவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஒருவேளை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டால், கடிதம் மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்து கேட்பு கூட்டத்திற்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டு உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments