சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவகார்த்திகேயன் பட வில்லன் நடிகர் விஜய் ராஸ் கைதாகி ஜாமீனில் விடுதலை

0 2407
சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவகார்த்திகேயன் பட வில்லன் நடிகர் விஜய் ராஸ் மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவகார்த்திகேயன் பட வில்லன் நடிகர் விஜய் ராஸ் மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் ராஸ். இந்தி திரைபடங்களிலும் நடித்து வரும் அவர், தற்போது வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ஷெர்னி படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் படபிடிப்பு தளத்தில் சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவரை ராம்நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.

பின்னர் பல மணி நேர விசாரணைக்கு பின் காவல் நிலைய ஜாமீனில் அவரை விடுவித்துள்ளனர். இதன் காரணமாக அந்த படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments