நெல்லையில் பாஜக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது

0 6707
நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

பெருமாள்புரம் பகுதியில் காய்கறிகடை நடத்திவரும் பெரியதுரை, பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார்.

கடை கழிவுகள் கொட்டும் விவகாரம் தொடர்பாக இவருக்கும், அருகே வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை காய்கறிகடைக்கு எதிரே நின்று ஜெபமணி சிகரெட் புகைத்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ஜெபமணி தனது துப்பாக்கியை எடுத்து பெரியதுரையை நோக்கி சுட்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பெரியதுரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜெபமணியை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments