'மானம் போச்சுனா இந்த டாமி உயிர் வாழ மாட்டான்! - தினமும் ஒரு பேன்ட், டி -சர்ட் அணியும் நாய்

0 18811

புதுச்சேரியில் வீட்டில் வளரும் நாய் ஒன்று மனிதர்கள் போலவே பேன்ட் டி - சர்ட் அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 வீட்டில் செல்லமாக வளர்பவை செல்லப்பிராணிகள். சிலர் குழந்தைகள் போல, நாய்களையும் பூனைகளையும் வளர்ப்பார்கள். குழந்தைகளை அலங்கரித்து கன்னத்தில் பொட்டு வைப்பது போல, நாய்க்ளுக்கும் பொட்டு வைத்து அழகு பார்ப்பவர்களும் உண்டு. இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் தங்கள் கையாலேயே நாய்களுக்கு உணவும் ஊட்டி விடுவார்கள். அந்த வகையில், புதுச்சேரியில் நாய் ஒன்று பேன்ட், டி சர்ட் அணிந்து கொண்டுதான் வீட்டை விட்டே வெளியே வருகிறது.

புதுச்சேரி குமரகுருப்பள்ளத்தை சேர்ந்தவர் அசோக். இவர்,டாமி என பெயரில் நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். டாமிக்கு ஒரு முறை பேன்ட், டி சர்ட் அணிந்து அசோக் அழகு பார்த்துள்ளார். பேன்ட் டி சர்ட்டில் டாமி சூப்பராக காட்சியளித்துள்ளது. டாமிக்கும் பேன்ட் , டி சர்ட் அணிவது பிடித்து போய் அதற்கு பழகி விட்டது. இப்போதெல்லாம், பேன்ட், டி சர்ட் அணியாமல் டாமி நாய் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. வாக்கிங் செல்லும் போது, பேன்ட் , டி சர்ட் அணிந்து கொண்டு டாமி நடந்து செல்வதை பார்க்கவே மக்கள் கூட்டம் கூடுகிறது. பகலில் டாமி தன் உடைகளை கழற்ற விடவே விடாதாம். இரவு, நேரத்தில் உறங்கும் சமயத்தில் மட்டும்தான் உடைகளை கழற்ற அனுமதிக்கிறதாம்.

அசோக்கின் வீட்டில் டாமியின் உடைகளை வைப்பதற்கென்றே தனி அலமாரி உள்ளது. . தினமும் விதம் விதமாக பேன்ட், டி சர்ட்டுகளை அணிந்து முகத்தில் மாஸ்க்கும் அணிந்து கொண்டு மனிதர்கள் போல வலம் வரும் டாமியை பொதுமக்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments