இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 83 லட்சத்தை தாண்டியது

0 852

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 46,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 83 லட்சத்து 13 ஆயிரத்து 877ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 514 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 611ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 53,357 பேர் குணமாகி வீடு திரும்பியதால், குணமானோர் எண்ணிக்கை 76 லட்சத்து 56 ஆயிரத்து 478ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,618 குறைந்ததால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 787ஆக சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments