அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் நிலவும் நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

0 1175
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் நிலவும் நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நடந்து வரும் நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

அமெரிக்க, சீன உறவு கடந்த காலங்களில் சுமுகமாகவே சென்றிருந்த நிலையில், அதற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் டிரம்ப்.

சீனாவுடனான வர்த்தக உறவில் அமெரிக்கா பெருமளவு பின் தங்கி இருந்தது. அதாவது அமெரிக்கா சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் அளவை விட, சீன பொருட்கள் பெருமளவில் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அமெரிக்காவுக்கு 345 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஏற்றத்தாழ்வைக் கண்ட டிரம்ப், சீன பொருட்கள் மீது கூடுதல் வரி சுமத்தப் போவதாக அறிவித்தார். இதற்குப் போட்டியாக சீனாவும் இறக்குமதி வரியை உயர்த்தியது.

இரு நாடுகளின் போட்டி காரணமாக உலகப் பொருளாதாரம் சற்று ஆட்டம் கண்டது. ஆனாலும் தனது கொள்கையில் டிரம்ப் உறுதியாக நின்றதால் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 156 பில்லியன் டாலராகக் குறைந்தது.

இந்த நிலையில் சீனாவுடனான சமீபத்திய வர்த்தகப்போர் ட்ரம்ப் நிர்வாகத்தின் சாதனைகளில் ஒன்று ஆளும் கட்சி தரப்பும், சீனாவுடனான வர்த்தகப் போர், அமெரிக்காவின் உற்பத்திப் பணிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி, விவசாயிகளுக்குத் தீங்கு விளைவித்துள்ளதாக பைடன் தரப்பும் தெரிவித்துள்ளன.

எனவே அதிபர் தேர்தலில் இருவரில் யார் வெற்றி பெற்றாலும் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் பொருளாதார விமர்சகர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments