தமிழகத்தில் இன்று 2435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 3741
தமிழகத்தில் இன்று 2435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 2707 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி இருக்கிறது. மேலும் 31 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 669 பேருக்கும், கோவையில் 238 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட மொத்தம் 19 ஆயிரத்து 201 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments