இந்திய விமானப்படைக்காக மேலும் 3 ரபேல் விமானங்கள் நாளை வருகின்றன

0 1180

இந்திய விமானப்படைக்காக மேலும் மூன்று ரபேல் விமானங்களை நாளை நாட்டிற்கு வருகின்றன.

பிரான்ஸ் நாட்டின் இஸ்ட்ரஸ் நகரில் உள்ள விமானத்தளத்தில் இருந்து 3 ரபேல் விமானங்களும், கொண்டு வரப்படுகின்றன.

அவற்றை எங்கும் இடை நிறுத்தாமல் நேராக அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த விமானங்களுக்கு நடுவானிலேயே எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பிரான்ஸ் விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் விமானமும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையில் 5 ரபேல் விமானங்கள் உள்ள நிலையில், புதிதாக 3 விமானங்கள் வர உள்ளன.

பிரான்சில் இருந்து மொத்தம் 36 ரபேல் விமானங்களை 56,000 கோடி ரூபாய் செலவில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments