சென்னை To நெல்லை சிறப்பு ரயிலின் கழிவறையில் சிக்கிய பெண் பயணி : நீண்ட நேர முயற்சிக்குப் பின் மீட்பு
சென்னையிலிருந்து நெல்லைக்கு புறப்பட்டுச் சென்ற ரயிலில் கழிவறைக் கதவு திறக்காததால், சிக்கிக் கொண்ட பெண் பயணி நீண்ட நேர முயற்சிக்குப் பின் வெளியேற்றப்பட்டார்.
சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு நேற்று இரவு நெல்லை சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. இதில் பயணித்த பெண் ஒருவர் கழிவறைக்குச் சென்றநிலையில், தாளிடப்பட்ட கதவில் ஏற்பட்ட பழுதால் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டார்.
விழுப்புரத்தில் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், ரயில்வே பணியாளர்கள் நீண்ட நேரம் போராடி கதவினை திறந்ததையடுத்து பயணி வெளியே வந்தார். இதனால், விழுப்புரத்திலிருந்து ரயில் புறப்படுவதில் காலதாமதம் நேரிட்டது.
Comments