சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு...கீழமை நீதிமன்றத்தில் நவ.11ஆம் தேதி விசாரணை

0 1593
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு...கீழமை நீதிமன்றத்தில் நவ.11ஆம் தேதி விசாரணை

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை, கீழமை நீதிமன்றத்தில் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு  உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது தந்தை மகன் இருவரையும் மிருகத்தனமாக தாக்கியதில் இருவரும் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்றும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து காவல் நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து புகார்களுக்கும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறதா என்றும் அப்படி இருந்தால் FIR பதிவு செய்ய கோரி பலர் ஏன் நீதிமன்றம் வருகிறார்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments