நாளை இந்தியா வரவுள்ள மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்

0 1325
நாளை இந்தியா வரவுள்ள மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள், நாளை இந்தியா வர உள்ளன.

விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கில் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கடந்த செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக 5 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

இரண்டாம் கட்டமாக, பிரான்சின் இஸ்ட்ரெஸிலிருந்து 3 ரபேல் விமானங்கள் இடைநிற்றல் இல்லாமல்,  8 மணி நேரத்திற்கும் அதிகமான பயணத்தின் மூலம் நேரடியாக நாளை ஜாம்நகரை வந்தடைய உள்ளன.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து விமானங்களும் இந்தியா வந்தடையும் என, இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments