கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை செல்ல அனுமதி-இந்து சமய அறநிலையத்துறை

0 2205
கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை செல்ல அனுமதிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை செல்ல அனுமதிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி,10 வயதுக்கு குறைவானவர் களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கும் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு தடை - நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் நீராடலுக்கு அனுமதி மறுப்பு - சன்னிதானம், பம்பை மற்றும் கணபதி கோவிலில் இரவு நேரங்களில் தங்குவதற்கு அனுமதி ரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments