ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்ததால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் ரூ.36,500 கோடி இழப்பு

0 1802
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்ததால், ஆசியாவிலேயே பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானிக்கு 36 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்ததால், ஆசியாவிலேயே பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானிக்கு 36 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் இரண்டாவது காலாண்டில் 15 சதவீதம் குறைந்து, 9570 கோடி ரூபாயாக சரிந்தது.

அதன் எதிரொலியாக பங்குகள் விலையும் இன்று ஒரே நாளில் 8 சதவீதத்திற்கு மேல் குறைந்து கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக 1876 ரூபாயாக சரிந்துள்ளது. இதனால் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பில் சுமார் 36 ஆயிரத்து 500 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments