சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பெண் நியூசிலாந்தில் அமைச்சராக நியமனம்

சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பெண் நியூசிலாந்தில் அமைச்சராக நியமனம்
நியூசிலாந்தில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சென்னையில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் சிங்கப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்து மேற்படிப்புக்காக நியூசிலாந்து சென்றவர். 2017ஆம் ஆண்டு லேபர் கட்சி சார்பில் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் பிரதமர் ஜெசிந்தா அர்டன் புதிதாக நியமித்துள்ள அமைச்சர்கள் 5 பேரில் ஒருவராகப் பிரியங்காவும் இடம்பெற்றுள்ளார். அவர் சமூகம், தன்னார்வத்துறை, சமூக வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளைக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments