பங்குச்சந்தை முதலீடு ஆசைகாட்டி ரூ.30 கோடி மோசடி - நிதிநிறுவன உரிமையாளர் கைது

0 3320
பங்குச்சந்தை முதலீடு ஆசைகாட்டி ரூ.30 கோடி மோசடி - நிதிநிறுவன உரிமையாளர் கைது

பங்குச்சந்தை முதலீடு ஆசைகாட்டி தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல விஐபி.க்களிடம் 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தென்காசியை சேர்ந்த நிதிநிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பங்கு சந்தை முதலீடு நிதி நிறுவனத்தை நடத்தும் குத்துக்கல்வலசையை சேர்ந்த மயில்வாகனன், தனது நிறுவனத்தின் வாயிலாக பங்குச்சந்தையில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்வோருக்கு மாதத்துக்கு 8 ஆயிரம் ரூபாய் லாபமாக தரபடுமெனவும் விளம்பரம் செய்துள்ளார்.

இதை நம்பிய எடிசன் என்பவர், தனது பணம், உறவுக்காரர்களான சில விஐபிக்களின் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

ஓரிரு மாதங்களுக்கு வட்டிபணம் அளித்தநிலையில் பிறகு மயில்வாகணன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் 6 மாதமாக தலைமறைவாக இருந்த மயில்வாகனனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

அவருடைய தாயார் உமாபார்வதி, உறவினர் சுந்தரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments