கணவரிடம் நல்லபடியா அனுப்பி வைங்க...! இளம் மனைவியின் விபரீத முடிவு..

0 113868
நாகர்கோவிலில் இறந்து போன தனது கணவரிடம் தங்களை நல்லப்படியாக அனுப்பி வைக்கும்படி உருக்கத்துடன் கடிதம் எழுதி வைத்து விட்டு, 2 மகள்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்றுவிட்டு இளம் தாய் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெசவாளர் காலனியைச் சேர்ந்த 32 வயது ரஞ்சித்குமார் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தார். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோருடன் மனைவி ராசி, 5 வயது மகள் அக்சயா, 3 வயது மகள் அனியா வசித்து வந்தனர்.

மாமனார் ராமதாஸ் மட்டும் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில், போதிய வருமானமின்றியும், கணவரை இழந்த சோகத்திலும் ராசி மன உளைச்சலில் இருந்த வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது 2 மகள்களுக்கு தூக்கமாத்திரைகள் கொடுத்துவிட்டு ராசி, தானும் தூக்கமாத்திரைகளை விழுங்கி தீவைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் உடல் கருகிய ராசி, 2 சின்னஞ்சிறு குழந்தைகளுடன் உயிரிழந்தார்.

இதனிடையே, கணவர் உயிரிழந்தப் பின் ஒரு வருஷம் தனக்கு டைம் கொடுத்தப் பின்னரே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் இப்படி ஒரு வாழ்க்கையை தன்னால் வாழ முடியாது என்றும் கணவரிடம் தங்களை நல்லபடியாக அனுப்பி வைக்கும்படியும் ராசி உருக்கத்துடன் கடிதம் எழுதியுள்ளார். அதைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments