ரூ.1.11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மஹிந்திரா தார் ஏலத்தில் எடுத்தவரிடம் ஒப்படைப்பு

0 2194
ரூ.1.11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மஹிந்திரா தார் ஏலத்தில் எடுத்தவரிடம் ஒப்படைப்பு

ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட மஹிந்திரா தார் 2020 ஜீப், அதை ஏலத்தில் எடுத்த டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தார் வாகனத்தின் முதலாவது வண்டியை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க மஹிந்திரா முடிவு செய்தது.

இதற்காக நாடு முழுதும் 500 இடங்களில் நடந்த ஏலத்தில் சுமார் 5500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த வண்டியில் தார் நம்பர் ஒன் என்ற பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டிலும், சீட்களிலும் உரிமையாளரின் இனிஷியலும் சீரியல் எண் ஒன்று என்றும் அலங்காரமாக அச்சிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments