ஐ.பி.எல் லீக் போட்டி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

0 5697
ஐ.பி.எல் லீக் போட்டி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல் தொடரின் 55வது ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தி, ஆறுதல் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்ததால், பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் தீபக் ஹூடா அதிகப்பட்சமாக 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதனைத் தொடர்ந்து பேட்டிங்செய்த சென்னை அணி, 1 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் Ruturaj Gaikwad, இந்த போட்டியிலும் 49 பந்தில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த தோல்வியின் மூலம், பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments