நீர் விமான சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்த சில மணி நேரங்களில் - 3000 பேர் முன்பதிவு

நீர் விமான சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்த சில மணி நேரங்களில் - 3000 பேர் முன்பதிவு
சபர்மதி நதிக்கரையில் இருந்து, பட்டேலின், ஒற்றுமைக்கான சிலை வரையிலான ஸ்பைஸ்ஜெட்டின் நீர் விமான சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்த சில மணி நேரங்களில், அதில் பயணிக்க மூவாயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் முதலாவது நீர் விமான சேவையான இதை துவக்கி வைத்த மோடி அதில் முதல் பயணியாகவும் பறந்து சென்றார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குநர் அஜய் சிங், பட்டேல் சிலைக்கு இந்தியாவின் இதர நகரங்களில் இருந்தும் விமான சேவையை துவக்குவது பற்றி ஆலோசித்து வருவதாக கூறினார்.
15 பயணிகள் செல்லக்கூடிய இந்த விமானத்தில், உடான் திட்டத்தின் கீழ் 5 இருக்கைகளுக்கு தலா 1500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
Comments