தீபாவளி ஷாப்பிங் செய்ய சென்னை தியாகராய நகர் பகுதியில் அலைமோதும் கூட்டம்

0 7623

இரண்டு வாரங்களில் தீபாவளி வரவுள்ள நிலையில், சென்னை தியாகராயநகரில் பண்டிகை கால பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது.

பிரதான தெருவான ரங்கநாதன் தெருவிலுள்ள துணிக்கடைகள், இனிப்புப் பலகாரக் கடைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இரண்டு இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து, மக்கள் கூட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வருவோரை திருப்பி அனுப்பி வரும் போலீசார், கடைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது, அனைத்து கடைகளிலும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments