மதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பெரியார் உணர்வாளர்கள் கைது

0 3108
மதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பெரியார் உணர்வாளர்கள் கைது

மதுரையில் தமிழன்னை சிலைக்கு மாலையணிவித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பெரியார் உணர்வாளர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

தமுக்கம் மைதானம் அருகே தமிழன்னை சிலைக்கு தமிழ்நாடு தினத்தையொட்டி மாலையணிவித்த 100க்கும் மேற்பட்டோர், சிலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு ரத்து, மத்திய அரசு பணிகளுக்கு தமிழில் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக குற்றஞ்சாட்டியும் ஆர்ப்பாட்டத்தில் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பலரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments