பீகாரில் இன்று ஒரே நாளில் நான்கு பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம்

0 1108
பீகாரில் இன்று ஒரே நாளில் நான்கு பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம்

பீகார் இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் நான்கு பொதுக்கூட்டங்களில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் கோட்டை என வர்ணிக்கப்படும் சாப்ரா தொகுதியில் இருந்து இன்று தமது பிரச்சாரத்தை தொடங்கும் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கிறார்.

அதன் பிறகு அவர் சமஸ்திபுரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.பின்னர் மோதி ஹரியில் உள்ள காந்தி மைதானத்தில் பிரதமர் தமது பிரச்சாரத்தைத் தொடர உள்ளார்.

பாகஹாவிலும் மோடி உரை நிகழ்த்துவார் என்றும் அந்த நான்கு பிரச்சார மேடைகளிலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் மோடியுடன் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

வரும் 3 ஆம் தேதி நடைபெறும் 2வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments