சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்

0 3873
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. 

நவம்பர் 14ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவினை தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு ஆயிரம் பக்தர்களையும், வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்து 500 பக்தர்களையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கொண்டு முன்பதிவு செய்யலாம்.

கோவில் நடை நவம்பர் 15 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு, 16 ஆம் தேதி முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள்.

41 நாள் மண்டலபூஜை நிறைவடைந்த பிறகு டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments