எவற்றிற்கு தடை தொடர்கிறது? எங்கெங்கு இ.பதிவு கட்டாயம்? - தமிழ்நாடு அரசு

0 6729
எவற்றிற்கு தடை தொடர்கிறது? எங்கெங்கு இ.பதிவு கட்டாயம்? - தமிழ்நாடு அரசு

கொரோனா கால ஊரடங்கில், நடைமுறையில் உள்ள சில தடைகள் தொடர்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, நீச்சல் குளங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தளங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கானத் தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி நீங்கலாக, வெளிமாநிலங்களிலிருந்து, தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள இ-பதிவு கட்டாயமாகும்.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்பவர்களுக்கும், இ.பதிவு முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், எவ்வித தளர்வுகளும் இன்றி, ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments