சூரத்தில் உள்ள ஸ்வீட் கடையில் விற்பனைக்கு வந்த தங்க இனிப்பு; கிலோ ரூ.9,000

0 2700
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள இனிப்புக்கடை ஒன்று, ”கோல்டு காரி” எனும் தங்க இனிப்பு வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள இனிப்புக்கடை ஒன்று, ”கோல்டு காரி” எனும் தங்க இனிப்பு வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சூரத் பகுதியில் கொண்டாடப்படும் சாண்டி பத்வோ (Chandi Padvo) திருவிழாவையொட்டி காரி (Ghari) என்ற இனிப்பு விற்பனை சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், சூரத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்று 24 காரட் தூய்மையான மிக மெல்லிய தங்க இழையால் சுற்றப்பட்ட காரி இனிப்பை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

சாதாரண காரி ஸ்வீட் ஒரு கிலோ 660 ரூபாய் முதல் 820 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், ”கோல்டு காரி” கிலோ 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments