நிலம் கையகப்படுத்தும் போது, எந்திரதனமாக செயல்பட கூடாது அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

0 4080
நிலம் கையகப்படுத்தும் போது, எந்திரதனமாக செயல்பட கூடாது அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தொழில்வழி தடத்திற்காக வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,  மீண்டும் விசாரணை நடத்தி முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, நிலத்தின் உரிமையாளர்களின் ஆட்சேபங்களை, அரசுக்கு அனுப்ப வேண்டுமே தவிர, நிராகரிக்க முடியாது என சுட்டிக்காட்டினார்.

ஒரு குடிமகன் தன்  ஆயுட்கால முதலீடான வீடு பறிபோகும்போது, வேறு வீட்டை உருவாக்க முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி,  உரிமையாளர்களின் ஆட்சேபங்களை தீவிரமாக பரிசீலித்திருக்க வேண்டுமே தவிர, இயந்திரத்தனமாக நிராகரித்திருக்க கூடாது எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments