திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து - 5 பேர் பலி

0 21524
திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து - 5 பேர் பலி

திண்டிவனம் அருகே முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த முருகேசன், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 9 பேருடன் சென்னையில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

பின்னர் சென்னையிலிருந்து எர்டிகா காரில் அருப்புக்கோட்டைக்கு 9 பேரும் திரும்பினர்.

காரை ஓட்டிய கவுதம் என்பவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. கீழ்எடையாளம் அருகே காலை 6 மணிக்கு கார் வந்தபோது,முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் அதிவேகத்தில் மோதியது.

விபத்தில் கவுதம் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனையிலும் பலியாகினர். மேலும் 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments