நாட்டின் முதல் நீர்வழி விமான சேவை.. குஜராத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..!

0 5073
இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சபர்மதியில் இருந்து நர்மதை வரை பயணித்தார்.

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சபர்மதியில் இருந்து நர்மதை வரை பயணித்தார்.

கடல், ஆறுகள் என நீர்ப் பரப்பில் இருந்து புறப்பட்டு, நீர்பரப்பில் இறங்கும் திறன்பெற்ற விமானங்கள், நீர்வழி விமானங்கள், கடல் விமானங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.

விமான நிலையங்கள், விமான ஓடுதளங்கள் இன்றி, நீர்ப்பரப்பை பயன்படுத்திக் கொள்ளும் இத்தகைய முதல் விமான சேவை குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் இருந்து புறப்பட்டு, கவடியா பகுதியில் ஒற்றுமை சிலைக்கு செல்ல நர்மதை ஆற்றில் இறங்கும் இந்த விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்குகிறது.

உடான் திட்டத்தின் கீழ், இந்த விமானத்தில் பயணிக்க ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமும், மற்றவர்களுக்கு 4 ஆயிரத்து 800 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த விமான சேவையை தொடங்கி வைத்த பிரதமர், அந்த விமானத்தில் கவடியா வரை பயணித்தார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளில் தொடங்கப்பட்டுள்ள இந்த நீர்வழி விமானசேவை, சுற்றுலாத் தொழில் வளர உதவும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments