துருக்கி, கிரீஸ் நிலநடுக்கம்... சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தன

0 2457
துருக்கி, கிரீஸ் நிலநடுக்கம்...சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தன

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

துருக்கியின் கடலோர மாகாணமாக இஸ்மீர் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சமோஸ் தீவிற்கு இடையே ஏஜியன் கடல்பகுதியை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 6 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக இஸ்மீர் நகரம் மற்றும் சமோஸில் கட்டடங்கள் குலுங்கின. 20க்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், துருக்கியில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனிடையே நிலநடுக்கம் காரணமாக இஸ்மிரின் சில பகுதிகளிலும், சமோஸிலும், செஸ்மி மற்றும் செஃபெரிஹிசர் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் ஊருக்குள் புகுந்தன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 196 முறை பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் இவற்றை காட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். இதனால் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பொதுமக்கள் பூங்காக்கள், சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிக சேதங்கள் உள்ள பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து வருவதாகதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments